12 WEEKS YEAR BOOK IN TAMIL
பொதுவாகவே நம்பலில் பலர் ஒரு வேலையை எடுத்தால் அந்த வேலையை கடைசி நேரம் வரை இழுத்துக்கொண்டு, கடைசி நேரத்தில் தான் மும்முரமாக செய்துமுடிப்போம், அந்த வேலையை கடைசி நேரம் வரை இழுக்காமல் ஒரு குறிப்பிட்ட நேரம் முன்னதாகவே செய்து முடிக்க தான் இந்த புத்தம் வாங்க படிக்கலாம்...
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஆண்டு திட்டம் (NEW YEAR PLAN) என்று நம்பலில் பலர் திட்டமிடுவது உண்டு, அதில் முதல் திட்டம் உடற்பயிற்சி, முதல் மாதத்தில் உடல் பயிற்சியை நன்றாக தொடங்குவோம், ஓரிரு மாதங்களில் அந்த திட்டம் சிறிது சிறிதாக கீழ்நோக்கி செல்லும் ஆண்டு இறுதியில் இந்த திட்டத்திற்காக தீவிரமாக செயல் பட்டுக்கொண்டிருப்போம், இவ்வாறு இருக்காமல், இந்த பன்னிரெண்டு மாத திட்டத்தை பன்னிரெண்டு வார திட்டமாக மாற்றினால் நாம் எல்லாவற்றையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்கலாம்,
இதனை செய்வதற்கு மூன்று வழிகள் உண்டு
1. நோக்கத்துடன் கூடிய திட்டம்
நமது திட்டத்தை பன்னிரெண்டு வார திட்டமாக எழுத வேண்டும், ஒரு ஒரு வாரத்திற்கு எதையெல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்றும், மேலும் இந்த திட்டத்திற்கு "ஏன்" என்ற காரணத்தையும் முக்கியமாக அதில் எழுத வேண்டும்
உதாரணத்திற்கு- நான் ஆங்கிலம் பேச வேண்டும், எனக்கு சீராக பேச வரவில்லை இவ்வாறு "ஏன்" என்ற காரணம் பலமாக இருக்க வேண்டும்.
2. உறுதியான நேரங்கள்
இரண்டாவது நீங்கள் செய்யும் வேலையை குறிப்பிட்ட நேரத்திற்கு செய்யுமாறு திட்டம் தீட்ட வேண்டும், அந்த திட்டத்தில் உங்களின் ஓய்வு நேரத்தையும் எழுதலாம்.
உதாரணத்திற்கு- நான் காலை ஆறு மணிக்கு புதிதாக வந்த பங்கு சந்தையை பற்றி தெரிந்து கொள்வேன்.
3. அளவு
நீங்கள் மேல் இருப்பதை ஒவ்வொரு வாரமும் நாம் எந்த நிலையில் உள்ளோம், நாம் எவ்வாறு கடந்து வந்து கொண்டு இருக்கிறோம் என்ற அளவு எடுத்து கொள்ள வேண்டும், அவ்வாறு எடுத்தால் மட்டுமே உங்களின் திட்டத்தின் நிலையை நீங்கள் அறிய முடியும்
மேல்கூறியவற்றை செய்து உங்களின் திட்டத்தை "எலான் மஸ்க்" போன்று செய்து, வாழ்வில் சிறந்து விளங்க "வசந்தமிழின்" வாழ்த்துக்கள்.
மேலும் இந்த புத்தகத்தை முழுவதுமாக படிக்கச் 👇:
