Translate

Followers

"ALMANACK OF NAVAL RAVIKANT BOOK IN TAMIL"

     நீங்க என்றைக்காவது நினைத்திருக்கிருறீர்களா, பணக்காரங்களுக்கு மட்டும் எப்படி அதிர்ஷ்டம் இப்படி சூறாவளி போன்று வீசுது, நமக்கு மட்டும் ஏன் அந்த காற்று ஒரு துளிகூட வரமாட்டீங்கிறது என்று? அப்படி நினைத்திருந்தால் கண்டிப்பாக நீங்களும் ஒரு நாள் பணக்காரர் ஆக போறீங்கன்னு அர்த்தம், அது எப்படி சத்தியம் என்று கேட்டால்? நம்மை போல் நடுத்தர மக்கள் பூஜ்யத்தில் இருந்து கோடியில் தொடுவதற்கான வழிகளை இன்றைய "Almanack Of Naval Ravikant" என்ற புத்தகத்தில் இருந்து வாங்க படிக்கலாம்,


பூஜ்யத்தில் இருந்து கோடியில் தொடுவதற்கு மூன்று வழிகள் உள்ளது :


1. உங்களுக்குள் இருக்கும் தனி திறமையை கண்டுபிடித்தல் வேண்டும்,

மனிதனாய் பிறந்த எல்லோர்க்கும் ஒரு தனி திறமை உண்டு, அது உங்களுக்கு தெரியாமல் ஒளிந்திருக்கும், அதை நீங்கள் தான் கண்டு பிடிக்க வேண்டும், என்னுடைய திறமை என்ன வென்று எனக்கு தெரியாது என்றால்! பேனாவை எடுத்து உங்களுக்கு பிடித்த பத்து செயல்களை எழுதுங்கள், அதை ஒவ்வொன்றாக செய்யுங்கள், எந்த செயல் உங்களுக்கு மகிழ்ச்சியையும், இதை செய்யதல் எனக்கு நேரம் போனதே தெரியவில்லை என்று உணருகிறீர்களோ அந்த செயல் தான் உங்களுடைய தனி திறமை என அதை உறுதிப்படுத்துங்கள்.


2. நாம் செய்வதை உலகத்திற்கு பரப்ப வேண்டும்,

திறமையை கண்டு பிடித்து விட்டோம், அதை உங்களுள் வைத்தால் என்ன அர்த்தம்? உங்களின் திறமையை எல்லாருக்கும் பரப்ப எதாவது ஒரு செயிலியை பயன் படுத்த வேண்டும், 


உதாரணத்திற்கு: என்னுடைய புத்தக கருத்துக்களை நான் என்னுடைய  வட்டாரத்திற்கு மட்டுமே பகிர்ந்து கொண்டு இருந்தேன், அவை ஒரு பத்து பேருக்கு மட்டுமே சென்றடைந்தது, ஆனால் இணையதளம் மூலம் "வசந்தமிழ்" என்ற பதிவின் மூலம் இன்று உலகம் முழுவதும் பகிர செய்கிறேன், இதை போல் உங்களின் திறமையை எல்லோர்க்கும் தெரியுமாறு பகிர வேண்டும், அப்படி செய்தால் மட்டுமே உங்களின் திறமை மதிப்பாகும், மேலும் அவை உங்களுக்கு பணமாகவும் மாறும்.


3. மதிப்பான பெயராக மாற வேண்டும் (BRANDING )

உங்களின் திறமையான செயல்கள் மூலம் உங்களின் பெயர் ஒரு நல்ல மதிப்பாக மாற வேண்டும், அப்படி மாறினாலே உங்களின் செயல்கள் எதுவாக இருந்தாலும் அதனை மக்கள் மிக ஆரவாரமாக வரவேற்பார்கள்.


உதாரணத்திற்கு: ஆப்பிள் நிறுவனம் 


மேல் உள்ளதை செயல் படுத்தி உங்களின் "BRAND" ஐ உருவாக்குங்கள், உலக பணக்கார பட்டியலில் இடம் பெறுங்கள், அதற்கு இந்த வசந்தமிழ் வாழ்த்துக்கள்


மேலும் இந்த புத்தகத்தை முழுவதுமாக படிக்கச்: 👇