Translate

Followers

HOW TO OVERCOME SHYNESS AND BECOME CONFIDENT IN TAMIL

"GOOD BYE TO SHY"

பொதுவா நம்ப எல்லார்க்கும் "கூச்சம்" இருக்கும், அவுங்க கிட்ட எப்படி பேசுறது, நம்ப பேசுனா அவுங்க அதை ஏத்துப்பாங்களா? நம்ப செய்யுற வேலைய சொன்னா மத்தவங்க நம்பள கேலி செய்வாங்களா? அப்டினு நிறைய இருக்கும், அந்த கூச்ச-சுபாவத்தை மாற்றி உங்க வாழ்க்கையில் ஒரு வெற்றியாளனாக மாற்றுவதார்த்க்கு தான் இந்த புத்தகம், "GOOD BYE TO SHY"



1. உங்களை சரிசெய்ய, உங்களிடம் பேசுங்கள்

நம்ப பலரும் செய்யும் முதல் தவறு, வெளியில் எதுவும் சொல்லாமல் நமக்குள்ளேயே பேசி முடிச்சிப்போம், நம்மகிட்ட பேசும் போதும், நம்ப மூளைக்கு உன்னால இத்தாலாம் முடியாது உனக்கு எதுவும் தெரியாதுன்னு ஒரு நெகடிவ்வாவே (Negative) பேசிட்டு இருப்போம், அதை முதலில் சரி செய்ய, உங்களுக்குள் பேச வேண்டும், அதுவும் இது நம்மளால முடியும், நம்ப "பண்ணுவோம், செய்வோம்" என்ற நல்ல சொற்களை பேசி பழக வேண்டும் 


2. சராசரி தோல்விகளை புரிந்து கொள்ள வேண்டும் 

ஒரு நேர்காணலில் நீங்கள் தோல்வி அடைந்துடீர்கள், மேலும் நீங்க செய்யுற எல்லா விஷயமும் மற்றவர்களால் நிராகிக்க படுகிறீர்கள் என்றால், அதுனால நீங்க சோர்வடைய வேண்டாம், உதாரணத்துக்கு "சிறந்த விற்பனையாளர்" என்று இன்னிக்கு பேர் வாங்குவங்களும் அவுங்க தினசரி வாடிக்கையாளர்கள் கிட்ட அவுங்க பொருள்களை விக்காம அவர்களை நிராகச்சிட்டு தான் இருகாங்க, அதுனால நிராகரிப்பு, தோல்வி இதையெல்லாம் பெருசாக பார்க்காமல் எனக்கு ஆறில் ஐந்து தோல்வியடைத்தாலும், ஒன்றில் வெற்றி பெறுவேன் என்று உறுதியோடு இருங்கள், இந்த தோல்விக்கான சராசரியை புரிந்துகொள்ளுங்கள் 


3. உங்களின் பேச்சு திறமையை வளர்த்துக்கொள்ள, பகுதி நேர வேலைகளை பாருங்கள்

இன்றைக்கு பலரும் அவர்களின் குறைகளை சரிசெய்ய மாட்டார்கள், அதை சரி செய்ய எந்த ஒரு முயற்சியையும் எடுக்க மாட்டார்கள், ஆனால் அதன் மூலமாக ஒரு வருமானம் வந்தால் கண்டிப்பாக சென்று அதை செய்வீர்கள், மேலும் அவர்களின் குறைகளை சரி செய்வார்கள், அதனால் பகுதி நேர வேலைகளை சென்று உங்களின் குறைகளை சரி செய்து உங்களின் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள் 


4. நீங்கள் எதைச் செய்தாலும் சிறந்தவராக இருக்க முயற்சிக்கவும்

இன்றைய காலகட்டங்களில் அவர்கள் செய்யும் வேளைகளில் எவரும் ஒரு கவனத்துடன் இருக்கமாட்டார்கள், நீங்க செய்யுற வேலையில் சிறந்தவராகவும் உங்களின் வேலையை சிறந்தவராக இருக்க வேண்டும், 

ஒரு உண்மை நிகழ்வு: ஒரு பெரிய பணக்காரன் வழிதவறி வேற ஒரு இடத்திற்கு போய்ட்டாங்க, அவரை அங்கு இருக்கும் ஒருவர் சரியாக வழி சொல்வதுடன், அவர் செல்கின்ற இடத்தை நெருங்கும் வரை கூடவே வந்தாராம், அதற்கு ஆச்சிரியம் அடைந்த அந்த பணக்காரன், நீங்க என்ன வேலை செய்றீங்க என்று கேட்டவுடன், குப்பை அல்கிறேன் என்று வருத்தத்துடன் சொன்னாராம், அதற்கு அந்த பணக்காரன் குப்பை அல்கிறேன் என்று வருத்தத்துடன் சொல்லாமல் இந்த நாட்டை சுத்தம் செய்யும் ஒரு தொழிலாளி என்று நினைத்து வேலைப்பாருங்கள் என்றானாம், மேலும் அந்த குப்பை அள்ளும் தொழிலையே, அந்த பணக்காரன் தன்னுடைய சொந்த உதவியாளனாக வைத்து கொண்டாராம்.


இந்த நான்கு விஷயங்களையும் பயன்படுத்திகொண்டு உங்களின் கூச்சசுபவத்தை துரத்தி விட்டு வாழ்க்கையில் வெற்றி பெற வசந்தமிழின் வாழ்த்துக்கள்


இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கச்: