Translate

Followers

"5 WAYS TO IMPROVE YOUR COMMUNICATION SKILLS IN TAMIL"

 

"ஐந்து வழிகளில் உங்களது பேச்சி திறமையை வளர்த்துக்கொள்வது எப்படி?"



பொதுவாவே நம்ப எல்லார்க்கும் மத்தவங்க பேசுறத ரொம்பவே ரசிச்சி கேப்போம், ஆனால் நம்பலை எல்லார் முன்னாடியும் பேச சொன்னால் ஒரு சிறிய தயக்கம் மற்றும் பயம் இருக்கும், அந்த பயத்தை போக்கி உங்களின் பேச்சி திறமையை வளர்த்துக்கொள்வதற்கு "ஐந்து-வழிகள்" இருக்கு வாங்க படிக்கலாம், 


1. பயம் நல்லது

மற்றவங்க முன்னாடி பேசுறதுக்கு எல்லார்க்கும்  ஒரு பயம் இருக்கும், இந்த ஒரு பயம் நியமானது தான், இந்த பயம் தான் உங்களை எல்லார் முன்னாடியும் நன்றாக பேச வைக்கப்போகுது, அட ஆமாங்க பயம்தான் உங்க மனசுல ஒரு எச்சரிக்கை குடுக்கும் அந்த எச்சரிக்கை தப்பான எந்த ஒரு விஷயத்தையும் உங்களை பேச விடாது, "அதுனால பயம் நல்லது".


2. நன்றாக நடியுங்கள்

நம்ப சோகமாக இருக்கிறதை எப்படி மத்தவங்க சுலபமாக கண்டு புடிச்சிடுறாங்க? நம்மளோட முக பாவனையை வைத்து தான், அதே போல் உங்களுக்கு நன்றாக பேச தெரியும், பேச தெரிந்ததில் நான் தான் வல்லுநர் அப்படி என்று நடியுங்கள் தப்பு இல்லை.


3. தெரிந்ததை மட்டும் பேசுங்கள் 

பொதுவா எல்லா விஷயத்துலையும் நமக்கு தெரிஞ்சதை மட்டும் பண்ணா நம்ப சந்தோசமாக பண்ணுவோம், மேலும் நமக்கு ஒரு மனதைரியமும் வரும், நமக்கு இது நல்லாவே தெரியும் என்று, அதே சூளிச்சியை தான் நீங்களும்  இங்கே செய்யணும், தெரிந்ததை மட்டும் பேசுங்கள், தெரியாததை துளிகூட பேசாதீர்கள். 


4. விரிவாக நடியுங்கள்

நம்ப தமிழ் சீரியலிற்கு எப்பவும் மவுசு குறைந்ததே இல்லை, உதாரணத்திற்கு எடுத்துக்கிட்டிங்கனா, சுலபமாக சொல்ற ஒரு விஷயத்தை இழு இழு வென்று இழுத்து சொல்லுவாங்க, ஆனாலும் மக்கள் அதை விரும்பி பாப்பாங்க சீரியலின் நேரமும் அதிகமாக தான் போகும், அதே போல் நீங்கள் சொல்கின்றதை நன்றாக விரிவாக சொன்னால் உங்களின் நேரத்தை அழகாக கடத்தலாம். 


5. ஒத்திகை முக்கியமானது 

பேசுறதுக்கு முன்பு நாம் எதை பேச போகிறோம் என்பதை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும், அதற்கு முன்கூட்டியே ஒத்திகையும் பார்த்துக்கொள்ள வேண்டும், 


மேல் கூறியவற்றை கடைபிடித்து, உங்களின் பேச்சுகளில் இருந்து மற்றவர் ஒரு துளியாவது மதித்தல் அல்லது அதை பின்பற்றினால், அது தான் உங்களின் திறமை, உங்களின் வெற்றி, அதற்கு "வசந்தமிழின்" நெஞ்சான வாழ்த்துக்கள் 


மேலும் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கச் : 👇