Translate

Followers

HOW TO HAVE A GOOD DAY_BOOK IN TAMIL



    பொதுவா நம்மளோட நாட்கள் எல்லாம் எப்படி போகுதுனு நீங்க என்னிக்காச்சு யோசிச்சிருக்கீங்களா? இல்லை! தினமும் எழுந்திருக்கணும்  வேலை செய்யுறோம், சும்மாவே பொழுதை போக்குறோம், இந்த மாரியான ஒரு நாட்களை தான் நீங்க தினமும் தாண்டி வந்துட்டு இருக்கீங்க, என்னிக்காச்சு ஒரு வழக்கமான நாளா இல்லாம என்னோட நாள் இப்படி தான் இருக்கனும், அதுவும் தினமும் எந்த வித சிக்கலும் இல்லாம சந்தோசமாக இருக்கனும் அப்டினு யோசிச்சிருக்கீங்களா?



அப்படி யோசிக்கலான, "இந்த புத்தகத்தை நீங்க கண்டிப்பா படிக்கணும்" 

ஒரு நல்ல நாள்-ஐ எப்படி உருவாக்கலாம்? என்றது தான் இந்த புத்தகத்துல சொல்ல வராங்க 

1. தற்காப்பு நிலை, மற்றும் கண்டுபுடிப்பு நிலை 

தற்காப்பு நிலை, 

தினமும் எழுந்திக்கிறோம், கைபேசி பாக்குறோம், வேலை செய்யுறோம், கண்ட-கண்ட விஷயத்துக்கு பயந்து, அந்த நாள இவன் கிட்ட இருந்து தப்பிச்சி வெளில வந்தா போதும் என்ற வாழ்க்கையை தான் எல்லாரும் வாழ்ந்துட்டு இருகாங்க, அது தான் நீங்க வாழற தற்காப்பு நிலை, இந்த தற்காப்பு நிலைய விட்டு வேற நிலைக்கு எப்படி போகலாம்னு இப்ப பாக்கலாம்

கண்டுபுடிப்பு நிலை,

எந்த ஒரு விஷயத்தை கண்டும் பயபுடமா, அந்த விஷயத்தை எதிர்கொள்ள கத்துக்கணும், அதுவும் நமக்கு சாதகமா கத்துக்கணும். காலைல எழுந்தோம் தூங்குனோம்னு இல்லாம அந்த நாள நமக்கு புடிச்ச மாறி மாத்திக்கணும், அது தான் கண்டுபுடிப்பு நிலை, இந்த நிலை மூன்று வடிவங்களை கொண்டது 

1. அதிகாலை
2. நடுநிலை 
3. நாள் இறுதியில் 

1. நம்ப எழுந்ததும், கைபேசிலேயே பாதி நேரம் செலவிடுகிறோம், அதுல வர செய்திகள் எல்லாமே அணிக்கான நாள ஒரு தற்காப்பு நிலை நாளா மாறிடுது, அத விட்டுட்டு காலை எழுந்ததும், ஒரு சின்ன நன்றியை இறைவனுக்கு சொல்லிட்டு, ஒரு சின்ன மூச்சிய இழுத்து விட்டுட்டு, ஒரு பத்து நிமிடம் இன்னிக்கு நம்ப என பண்ணப்போறோம்னு ஒரு பட்டியல் மாறி போட்டு வெச்சுக்கலாம் (TO DO LIST)

2. நடுநிலை நாள், நம்ப இத தான் இன்னிக்கு செய்யப்போறோம் அப்டினு நமக்கு முன்கூட்டியே தெரிஞ்சிடுச்சுனா, அனிக்கோட நாள் நமக்கு கண்டிப்பா நல்லதா தான் போகும், அப்படி போக விடாம நம்பள நிறைய பேரு தொந்தரவு செய்வாங்க, அவுங்கள நெனச்சி ஐயோ இது போய்டுச்சேனு வருத்தப்படாம அதுல இருந்து ஒரு புத்துணர்ச்சியா வெளில வரணும், எவ்வளவு இடையூறு வந்தாலும் நம்ப வேலைல நம்ப குறியாக இருக்கனும் 

3. நாள் இறுதியில், பொதுவா நம்ப இன்னிக்கு என்னதான் செஞ்சோம் என்ற கேள்வி இனிமேல் வரவே வராது, நம்ப இன்னிக்கு நம்ப திட்டம் போட்ட மாறி செரியா செஞ்சிமுடிச்சிட்டோம் என்ற ஒரு திருப்தி இருக்கும், அந்த திருப்தி உங்களுக்கு சந்தோசத்தை குடுக்கும், அந்த சந்தோஷத்துக்கு நீங்க ஒரு நன்றியை சொல்லிட்டு உங்களோட நாளா முடிச்சிக்கோங்க.

இந்த மாறி நீங்க தினமும் பண்ணீங்கன்னா, கண்டிப்பா இந்த புத்தகத்தோட தலைப்பு மாறி, உங்க நாள் இனிய நாளாக போகும்.


இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கச் 👇