Translate

Followers

"சாணக்கியாவின் ஆறு வாழ்க்கை நீதிகள்"


"சாணக்கியாவின் ஆறு வாழ்க்கை நீதிகள்" 



1. முட்டாளுக்கு அறிவுரை கூறாதே 

இது நடக்கும்னு நம்புறவன் கிட்ட, நம்ப என்ன வேண்டுமானாலும் பேசலாம், அவன் நம்ப சொல்ற எல்லாத்தையும் மதிச்சு அவனோட வாழ்க்கைல பயன் படுத்துவான், ஆனா இதல்லாம் நடக்கவே நடக்காது, உனக்கு என்ன தெரியும்னு சொல்லுறவன முட்டாளா நெனச்சுக்கோங்க, ஏன்னா அவன்கிட்ட நம்ப பேசுனாலும் ஒன்னு தான் பேசலானாலும் ஒன்னு தான் 


2. ஒவ்வொரு உறவிற்கும் ஒரு சுயநல நோக்கம் உள்ளது  

எல்லா உறவுக்கும் அது குடும்பமா இருக்கலாம், நட்பாக இருக்கலாம், யார்வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் எல்லாரும் ஒரு தேவைக்காக தான் நம்ப கிட்ட பேசுவாங்க பலகுவாங்க, உங்க தேவைய முடிஞ்சதும் உங்கள மறந்துடுவாங்க, அதுனால எல்லாரிடமும் ஒரு கவனத்தோடனே இருங்க,

நீங்கள் நம்பலானாலும் இந்த ரெண்டாவது விஷயம் நிஜம் 


3. தன்மையா பேசி உங்க காரியத்தை முடித்து கொள்ளுங்கள், 

ஒரு விஷயம் எதுவா இருந்தாலும் ஒரு உதவியா இருந்தாலும் அல்லது  வேலையா இருந்தாலும் அது நம்ப பேசற்துல தான் இருக்கு, அதுனால பேசற்த தன்மையா பேசுங்க


4. சூழ்நிலைக்கு ஏத்த மாறி பேசுங்க 

நம்ப வாழ்க்கைக்கு முக்காவாசி பிரச்னை நம்ப பேசற்துல தான் இருக்கு, பைத்தியம் தான் தோன்றாத வெளிப்படையா பேசும், ஆனா புத்திசாலிங்க எந்த எடத்துல எவ்ளவு பேசணும் என்ற விதையை தெரிஞ்சி வெச்சிருப்பாங்க 


5. உங்களோட சுய மரியாதையை எப்பொழுதும் விட்டு கொடுக்காதீங்க 

உங்கள விட அறிவிலயும், வயசுலயும், தொழிலையும் பெரியவர்களாக  இருக்கலாம், அதுனால அவங்க முன்னாடி கைகட்டி நிக்கறத விட, அவுங்க முன்னாடி நீங்க உங்களுக்கான மரியாதையோடவே நிக்கலாம் தப்பு இல்லை, அந்த மரியாதையை திமிராக தான் மாற கூடாது 


6. கெட்டதா பேசுறவங்க கிட்ட காது கேக்காதவங்களா இருங்கள்

கிணத்துல ரெண்டு தவளை தவறி விழுந்துடுச்சு, அது ரெண்டுமே மேல வர முயற்சிக்கும் பொது மேல இருக்குற தவளைங்க எல்லாமே உன்னால வர முடியாதுனு சொலிட்டேயே இருந்துச்சு, இத கேட்டுட்டு ஒரு தவளை பயத்துல அங்கேயே தங்கிடுச்சு, ஆனா இன்னோரு தவளை கஷ்டப்பட்டு முயற்சி பண்ணி, பண்ணி மேல வந்துடுச்சு, வந்ததுக்கு அப்பறம் தான் தெரியுது அந்த தவளைக்கு காது கேக்காதுனு, அதுனால கெட்டது பேசுறவங்க கிட்ட காது கேக்காத மாறி இருங்க 


இந்த "ஆறு நீதிகளும்" உங்க வாழ்க்கைக்கு பயன்படுத்தினாலே கண்டிப்பா சாதிப்பீங்க,


இந்த புத்தகத்தை படிக்கச்: 👇