சொல்லாத காதல்
சொல்லாத காதல்
எதிர்மறையாத ஏக்கம் என்னிடம்தானோ,
ஒளிர்மறையாத பார்வை உன்னிடம்தானோ,
ஒன்றாய் பேச நினைப்பது இருமனம் தானோ;
தள்ளிபோகாதே என சொல்லும், உன் கொலுசொலிகள் தானோ!
முரண்டுபிடிப்பது என் முறுக்கு மீசை ஏனோ?
மெல்ல ஒலித்தது, உன் கள்ளச்சிரிப்பு சத்தம்தானோ!
அதில் உள்ளம் கொள்ளைபோன கள்ளன் நானோ,
என் கண்களை பார்த்து சொல்லமறக்காத உன்
காதல் ஏனோ?
இரு மனங்களும் காதலிக்கும் அழகில், அதை வெளிப்படுத்த முன்வராத அழகில் உருவான கவிதை.
- வசந்த்
Click here to read my latest book: https://vasanthamizl.blogspot.com/p/blog-page.html
Click here to read my entire blog: https://vasanthamizl.blogspot.com/
Labels:
Kavithaigal
