பணம் பணம்
பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழி போக, பணம் எதையும் செய்யும் என்ற பழமொழி புதுப்பித்தபடி இன்று உலகம் நகர்கின்றது, பணத்தில் நகரும் உலகத்திற்கு ஒரு கவிதை
பணம் பணம்
தவறிட்டு சினம் சினந்தோர்
இன்று சில்லறை இட்டு சிரித்து வந்தாரே
மனம் விட்டு பேசத் தெரிந்தோர்
பையில் பைசா உள்ளதா என்று தெரிந்து வந்தாரே
சோறுண்டு சொர்க்கம் சேர்ந்தோர்
செழிப்புண்டு சிதைந்து போனாரே
வலி பொருத்தி வார்த்தை காப்பாற்றியோர்
இன்று வர்த்தகவுலகில் வார்த்தை தவறினாரே
மணம் மணம் என்று மானம் காத்தோர்
பணம் பணம் என்று நம்மை உதறி போனாரே
-பணமில்லாத மனித நேசத்தில் வாழும்
வசந்த்
