Translate

Followers

மாயக் கண்ணாடி


 தமிழ் வரிகளை, வாழ்த்தவும் வழங்கவும் தான் இந்த "வசந்தமிழ்",  என்பதற்கேற்ப, என் நண்பனின் கவிதை வரிகளில், ஒரு கண்ணாடி வார்த்தைகள், "மாயக்கண்ணாடி". 


மாயக் கண்ணாடி




       

         நாம் சேர்ந்தே பயணித்த பாதையில்

தனியாக நான் மட்டும் பயணிக்கும்போது ததும்பி

வழிந்திடும் தவிப்புகள் உனக்கு வேடிக்கையாகலாம்...

 பார்! பார்த்தே நகர்ந்து செல்

தவிப்பின் உச்சியில்தான் நிற்கிறேன்...

 வேதனையின் விளிம்பில் தான் தடுமாறி தவிக்கிறேன்...

 மறைக்க ஏதுமில்லை இங்கு

மறக்கவும் வழி தெரியவில்லை...

 நேசம் இத்தனை கொடிதென்று

இத்தனை நாள் உணரவுமில்லை...

உணரும்போது நேசத்த்தின் முழுநீள சுவையூட்டிய நீயும்

இங்கு இல்லை...

 தவிப்பின் தடத்திலே நான் மட்டும்

தனியே உழல...

 உண்மை நேசமென்றால் உனக்கும் தவிப்பு

இருக்கத்தான் வேண்டுமே...

 எப்படி கடந்தாயோ புரியவில்லை

அதை அறிந்து பின்பற்றவும் விருப்பமில்லை...

 மெதுவாய் தவித்தே கண்ணீரில் நனைந்தே

கனத்த மனதினை சுமந்தே கடக்க பழகிக்

கொள்கிறேன்...

 இதுவும் கடந்து போகுமென காலத்தின்

கைகள் பற்றி காத்திருக்கிறேன்...

 உனைபோல் இன்னொரு நேசம் எனை தாக்கினால்

மீண்டும் நான் ஏமாறக்கூடும்...

 அது ஏமாற்றமில்லை மனம் வேண்டிடும்

ஒரு சுகம்தான் !

 என் சின்ன சின்ன சேட்டைகளை இறக்கி வைத்திட!

என் மனதின் சிலிர்ப்புளை உயிர்ப்பித்திட!

 என் ரசனைகளின் ரீங்காரங்களை உன்னுள் புகுத்திட!

அறிமுகம் முதல் அறிவுறை வரை அத்தனையும்

இன்பத்தின் பெருவெளிதான்!

 ஆனால் அதில் உன் சாயல் மட்டும் இல்லாமல் வேண்டும்!

 உன் சாயம் மீண்டும் ஒட்டிக்கொள்ளும் ஓர் நிலை

இல்லாமல் வேண்டும்!

 சாத்தியமில்லாத சத்தியங்களை விரும்பும் மனம் ஒரு

மாயக் கண்ணாடி!!!




Click here to read my latest books: https://vasanthamizl.blogspot.com/p/blog-page.html

Click here to read my latest poems: https://vasanthamizl.blogspot.com/