நீங்காத பாடல் நிலா- SPB
சிகரம் தொட்ட லட்சங்கள் பலர், ஆனால் தன்னையே ஒரு சிகரமாய் மாற்றியவர்களோ சிலர், தன்னையே ஒரு தனி சிகரமாய் மாற்றிய லட்சங்களில் இல்லை, கோடிகளில் ஒருவரான மறைந்த நம் பாடல்களின் சக்கரவர்த்தி SPB விற்காக என்னால் முடிந்த ஒரு கவிதை...
நீங்காத பாடல் நிலா- SPB
புல்லாங்குழலில் இசைக்கவில்லை
உனது புன்னகை குரலில் இசைத்ததேனோ
இசைக்காத இசையெல்லாம்
உன் வாயிசையில் வார்த்தைதானோ
மயங்காத நெஞ்சங்கள் யாவும்
உன் வார்த்தைகளில் வசிமையானதேனோ
பூங்கோதையின் கையில் உள்ள பூக்கள் யாவும்
உன் பாட்டிற்க்கு கிடைத்த வாழ்த்துதானோ
காதல்கள் யாவும் காவியமாகவில்லை
உன் காதலில் ஓவியமானதேனோ
கலங்காத எண்ணங்கள் யாவும் உன் பாடல் இசையில் வண்ணங்கலானதேனோ
சாதனையின் சிகரங்கள் யாவும்
கன்னத்தில் விழும் சிரிப்பு சத்தங்கள் தானோ
உன் குரலில் அனைத்து இதயங்களையும் துடிக்க வைத்து
உன் இதயத் துடிப்பை நிறுத்தியது ஏனோ?
- உங்கள் குரலை ரசித்த ரசிகர்களில் ஒருவன்
வசந்த்
