ஒரு தலை காதல்
காதலும் தோற்கும் ஒருதலை காதலில்....
ஒரு தலை காதல்
ஒற்றை கண்ணில் உன்னை பார்த்தேனடி,
இமைகள் துடிக்காமல் இதயம் நின்று போனதடி;
வாடிய மலர்களும், உன் கண் இதழ்களை பார்த்து மலர்ந்ததடி,
பறவைகள் பறந்தபடி, என் கால் தடங்கல் உன்னை பின் தொடர்ந்ததடி,
என் நினைவை மறைத்து, உன்னிடம் நெருங்கியதடி,
என் சுவாசத்தில் உன் வாசம் கலந்ததடி;
உன் அழகிற்கு, இந்த பூலோகம் அடிமையானதடி,
மனதிற்குள் இசைத்து ஒலித்தது ஒரு ராகமடி,
இனி என் காதலும், ஆனது ஒரு தலை ராகமடி...
Click here to read my previous post: https://vasanthamizl.blogspot.com/
Labels:
Kavithaigal
